ஜாதக கட்டம் விளக்கம்

ஒரு ஜாதகத்தில் பன்னிரண்டு கட்டங்கள் இருக்கும். இந்த பன்னிரண்டு கட்டங்களும் வீடு, பாவகம், ராசி, என்றெல்லாம் அழைக்கப்படும்.

வீடு: ஒரு ஜாதக கட்டம் பன்னிரண்டு வீடுகளைக் கொண்டது. எந்தவொரு ஜாதகத்திலும் “ல” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் வீடு முதலாம் வீடு. அதிலிருந்து வலது சுற்றில் 2, 3, என 12 வரை கணக்கிட வேண்டும்.
பாவகம்: ஜாதக கட்டம் பன்னிரண்டு வீடுகளைக் கொண்டது. . ஒவ்வொரு கட்டமும் 30 பாகை விஸ்தாரம் கொண்டது. மொத்தம் 360 பாகை.லக்னம் முதலாக ஒவ்வொரு வீடும் அமைந்துள்ள பாகை அடிப்படையில் ஒன்று முதல் பன்னிரண்டு பாவகங்கள் கணக்கிடப்படும்.

ராசி: ஒருஜாதக கட்டத்தில் பன்னிரண்டு வீடுகள் உள்ளல. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு ராசியையைக் குறிக்கும். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சின்னமும் அதனைச் சார்ந்த பெயர்களும் அமைக்கப்பட்டுள்ளது. அவை முறையே மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகும்.

ஜாதக கட்டம் - ராசித் தத்துவங்கள்:

ராசிகளில் பல தத்துவங்கள் அடங்கியுள்ளன. இந்த தத்துவங்களின் அடிப்படையில் ராசிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

பாலின அடிப்படையில் ஆண் ராசிகள், பெண் ராசிகள் என்று பிரிக்கப்படுகின்றன

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்- ஆண் ராசிகள்

ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் – பெண் ராசிகள்

எண்ணிக்கை அடிப்படையில் ஒற்றைப் படை மற்றும் இரடடைப்படை ராசிகளாக பிரிக்கப்படுகின்றன

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்-
ஒற்றைப்படை ராசிகள்
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் – இரட்டைப்படை ராசிகள்

நகரும் தன்மை அடிப்படையில் ராசிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன

மேஷம், கடகம், துலாம், மகரம் – சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் – ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் – உபய ராசிகள்

பஞ்ச பூத தத்துவங்களின் அடிப்படையில் ராசிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

நெருப்பு – மேஷம், சிம்மம், தனுசு
நிலம் – ரிஷபம், கன்னி, மகரம்
காற்று – மிதுனம், துலாம். கும்பம்
நீர் – கடகம், விருச்சிகம், மீனம்

மேலும் ராசிகள், மனிதத்தன்மை உடைய ராசிகள், மிருகத்தன்மை உடைய ராசிகள், மென்மையான ராசிகள், வறண்ட ராசிகள், இரண்டு கால் ராசிகள், மூன்றுகால் ராசிகள், நாற்கால் ராசிகள், ஆறுகால் ராசிகள், ஊர்வன ராசிகள், நடப்பன ராசிகள், பறப்பன ராசிகள் பயனுள்ள ராசிகள். முழுப்பயனற்ற ராசிகள், மலட்டு ராசிகள் என இன்னும் பலப் பல பிரிவுகளைக் கொண்டுள்ளன.

ஜாதக கட்டம் – ஸ்தானங்கள்

ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். குறிப்பிட்ட பாகையில் இருக்கும் வீடுகள் மிகவும் முக்கியமானவை. அவைகள் ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும். அவற்றின் பெயர்கள் :

திரிகோண ஸ்தானம், கேந்திர ஸ்தானம், பணபர ஸ்தானம், மறைவு ஸ்தானம்

திரிகோண ஸ்தானம்

ஒத்த அமைப்பைக் கொண்ட வீடுகள் திரிகோணம் என்று அழைக்கப்படும். லக்கினத்திலிருந்து 1, 5, 9 ஆகிய வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும். இந்த வீடுகளின் அதிபதிகள் திரிகோண அதிபதிகள் ஆவர். இவர்கள் ஒரு ஜாதகத்திற்குப் பரிபூரண சுப பலன்களைத் தருவார்கள். ஜாதகத்தில் இவர்கள் அமையும் நிலையைப் பொறுத்தே ஜாதகரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகின்றது. திரிகோண அதிபதிகள் மூவரும் வலிமை பெற்று இருக்கும் ஜாதகம் புண்ணிய ஜாதகம் என்றும், வலிமை இழந்த ஜாதகம் பாப ஜாதகமாகவும் கருதப்படும்.

கேந்திர ஸ்தானம்
வெவ்வேறு தன்மைகள் கொண்ட வீடுகள் கேந்திரம் என்று அழைக்கப்படும். கேந்திரம் என்பது லக்கினத்திலிருந்து 1 , 4 , 7, 10 ஆகிய வீடுகள் ஆகும். இந்த வீட்டிற்கு அதிபதிகள் கேந்த்ராதிபதிகள் என்று அழைக்கப்படுவர். திரிகோண ஸ்தானத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தானம் கேந்திர ஸ்தானம் ஆகும். மனித வாழ்வின் கர்ம வினைகளுக்கு ஏற்ப நிகழும் சுக துக்கங்களை திரிகோண வீடுகளுக்கு அடுத்தபடியாக கேந்திர வீடுகள் தீர்மானிக்கின்றன. கேந்திர அதிபதிகள் கேந்திரத்தில் இருந்தால் தோஷம் ஏற்படும் என்பார்கள். ஆனால் சுப கிரகங்களுக்கு மட்டும் தான் இந்த தோஷம் ஏற்படுமென்றும் கருதப்படுகின்றது.

பணபர ஸ்தானம் :

2 மற்றும் 11 இந்த இரண்டும் பணபர ஸ்தானம் ஆகும். திரிகோணம் மற்றும் கேந்திர ஸ்தானங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெரும் ஸ்தானம் பணபர ஸ்தானம் என்று கூறப்படும். இந்த இரண்டு வீடும் ஒருவரின் பொருளாதார நிலையைக் குறிக்கும். இரண்டு என்பது தனம் என்னும் பணத்தைக் குறிக்கும். 11 என்பது லாப ஸ்தானத்தைக் குறிக்கும்.

மறைவு ஸ்தானம்

மறைவு ஸ்தானம் என்பது 3, 6, 8, 12 ஆகும். இந்த இடத்தை துர் ஸ்தானம் என்றும் கூறுவார், இந்த இடங்கள் அசுப பலன்களை அளிக்கும். பொதுவாக இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் பலம் குறைந்து காணப்படும். இருப்பினும் இதில் சில கிரகங்களுக்கு விதி விலக்கு உண்டு. மறைவு ஸ்தானங்களில் மூன்றாம் வீடு பாதி மறைவு ஸ்தானம் என்றும், பன்னிரண்டாம் வீடு முக்கால் மறைவு ஸ்தானம் என்றும் ஆறு மற்றும் எட்டு முழு மறைவு ஸ்தானம் என்றும் கூறப்படும்.
ஆட்சி, உச்சம், நீசம், நட்பு, பகை, மூலதிரிகோணம்
பன்னிரண்டு கட்டங்களில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதில் சில கட்டங்கள் குறிப்பிட்ட கிரகங்களின் ஆட்சி வீடாக அமைகின்றன, குறிப்பிட்ட ஒரு வீடு குறிப்பிட்ட கிரகத்திற்கு உச்ச வீடாக அமைகின்றது. உச்ச வீட்டிற்கு நேரெதிர் வீடு நீச்ச வீடாக அமைகின்றது. சில வீடுகள் நட்பு வீடுகளாக அமைகின்றது. சில வீடுகள் பகை வீடுகளாக அமைகின்றது. சில வீடு மூலத் திரிகோண வீடாக அமைகின்றது. மூலத் திரிகோணம் என்றால் எப்போழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் வீடு ஆகும்.

Author's Bio: 

இன்றைய பொழுதை பிரச்சினை இல்லாமலும், இனிமையாகவும் கழிக்க பொதுவான இன்றைய ராசி பலனைப் பாருங்கள் - https://www.astroved.com/tamil/rasi-palan/