அனுமன் என்ற படத்தின் அர்த்தம்:

சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்கு "பெரிதானதது" என்பதால், "ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. இன்னொரு வழக்கில் "ஹன்" என்பதற்கு "கொன்றவன்", "மானம்" எனபதற்கு "தற்பெருமை" என்பதல், "ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பதுதான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அஞ்சனையின் புத்திரன் என்பதாலும் அனுமன் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் ராம பக்தனாகவும் ராமனின் தொண்டனாகவும் இருப்பவர். இவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர்.

இன்பம் தரும் அனுமன் வழிபாடு:

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அனுமனை நாள் தோறும் வழிபடுவது சிறப்பு. குறிப்பாக சனிக் கிழமை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். அனுமன் பிறந்த நாளே அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகின்றது.
அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். இன்பம் பெருகும்.

அனுமனை எப்படி வழி பட வேண்டும்?

அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து இல்லத்தையும் தேகத்தையும் தூய்மை ஆக்கிக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றிவிட்டு உணவு உட்கொள்வதற்கு முன்னர் ஆலயம் சென்று ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.
கோவிலுக்கு செல்லும் போது வெறும் கையில் செல்லுதல் கூடாது
ஆலய விதிகளுக்கு கட்டுப்பட்டு விளக்குகளை ஏற்றலாம்.
ஆலயத்துள் மன அமைதி காக்க வேண்டும்.
ராம நாமத்தைக் கூறியும். ஆஞ்சநேயரின் பிற சுலோகங்களைக் கூறியும் பிரகாரத்தை வலம் வர வேண்டும்.
ஆஞ்சநேயருக்கு உகந்த துளசி மாலை கொண்டு அர்ச்சனை செய்யலாம். துளசி மாலைகள் சற்றலாம்.
வடை மாலை சாற்றி வழிபடலாம்.
வெற்றிலை மாலை சார்த்தி வழிபடலாம்.
வெண்ணை சாற்றி வழிபடலாம்
அவல் ,சர்க்கரை, கற்கண்டு, தேன் வாழைப்பழம் நைவேத்தியம் செய்யலாம்.
துளசி தீர்த்தம் அருந்தி ஒரு வேளை மட்டும் உணவு உண்டு உபவாஸ்ம் இருக்கலாம்.
சிலர் வீட்டில் ஆஞ்சநேயர் படத்திற்கு வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது வழக்கம். பக்தி சிரத்தையுடன் சந்தனம் குங்குமம் சிந்தூரம் பூசி வழிபடலாம்.
ஸ்ரீ ராமஜெயம் (அ) ராம் - இந்த ராம நாமத்தை 108 முறை 1008 முறை எழுதலாம்.

ஆஞ்சநேயர் அஷ்டோத்த்ரம், ஏக ஸ்லோக சுந்தரகாண்டம், ராம நாராயணம், அனுமன் சாலீசா பாராயணம் செய்யலாம் அல்லது கேட்கலாம்.

Author's Bio: 

அனுமன் ஜெயந்தி கொண்டாடும் இந்த வேளையில் ஆஸ்ட்ரோவேத் ஆஞ்சநேயருக்கு பல வித வழிபாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது.